Saturday, December 20, 2014

தோள் சீலைப் போராட்டம்!- பா ஜ க தமிழக ஆதரவாளர் கவனத்திற்கு!




பார்ப்பனீய (கேரள பார்ப்பனர்களை நம்பூதிரிகள் என்பர்) இந்து மதத்தைத் தாங்கிப் பிடித்துக்கும் பா.ச.க. ஆட்சியில் இன்று இணை அமைச்சர் பதவி வகிக்கும் பொன்.இராதாகிருட்டிணன், கட்சியில் பதவியில் இருக்கும் தமிழிசை சௌந்தராசன் ஆகியோர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்பதிவு அவர்கள் கவனத்திற்கு.
நமது வரலாற்றின் கறைகள்!
பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்!
திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."
இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."
மேலாடையில்லா கீழ் சாதிப்பெண்இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்குமுறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் "கிருத்துவத்திற்கு மாறினார்கள்." அவர்கள் ஜாதிப் பெண்கள் மார்பகத்தை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது 'தோள்சீலைப் போராட்டம்' எனப்பட்டது.
இந்த அசிங்கத்தை, அவமானத்தை, அவலத்தை, அடக்குமுறையை நீக்க '37 ஆண்டுகள்' போராட வேண்டியிருந்தது. அப்படியும் நாடார் 'கிருத்தவ பெண்களுக்கு' மட்டும் தான் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது; அப்ப ஹிந்து நாடார் பெண்கள்? ஏனைய ஜாதி பெண்கள்? நம்பூதிரிகளின் அடிமையான திருவிதாங்கூர் அரசா கொக்கா? நம்பூதிரி உக்கார சொன்னா திருவிதாங்கூர் அரசன் படுத்துக்குவான்!
மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை! மிஸ்டர் நம்பூதிரி தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும், முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள்.சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று சந்தோஷமாக மிஸ்டர் நம்பூதிரி-ஐ புணர வைத்தார்கள்.
கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை! 18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?


இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி, நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் 'செய்தவன்' எப்படி உண்மை பேசுவான்? அவன் கடவுளைப் பற்றி சொல்வது எல்லாமே பொய்; அவை யாவும் அவன் வயிறு வளர்க்க! மேலும், தன் உடலை வளர்க்க; பிறன் மனைவிகளை வளைக்க! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!

நன்றி--இளம்வழுதி கலையரசன்

No comments:

Post a Comment