Saturday, April 4, 2015

பாப்பாளி

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். 
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100
கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. 
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


கருத்தரித்த பெண்ணுக்கென பாரம்பரி வைத்திய முறை

கருத்தரித்த பெண்ணுக்கென நம் பாரம்பரியம் தேடித்தேடிச் சொன்ன வைத்திய முறைகளை மெள்ள மெள்ள மறந்துவிட்டோம். 'கன்சீவ் ஆயிட்டீங்களா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா உடனே போய்ப் பாருங்கஎன மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டும் நம்பி இருக்கும் கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது. மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத் துறை. ஆனால் கருத்தரித்த காலம் முழுமையும், மருந்தையும் டானிக்கையும் தாண்டி மற்ற எந்தப் பாரம்பரிய மருத்துவ விஷயங்களையும் புறக்கணிப்பது வேதனையான விஷயம். தம் குடும்ப மருத்துவரை அணுகி தேவையான பாதுகாப்பு விஷயங்களை அறிந்துகொள்வதும், தன் உடல் நோய் எதிர்ப்பாற்றல், சர்க்கரை, ரத்தக்கொதிப்பின் அளவு, தொற்று நோய்கள் இருப்பு ஆகியவற்றை, கருத்தரித்த பெண் அறிந்துகொள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ அறிவியல்தான், மகப்பேறுகால உயிரிழப்பையும், பேறுகாலத்தின்போது குழந்தை மரணம் அடைவதையும் பெருவாரியாகக் குறைத்திருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள் அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிசேரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் பெண்களின் இடுப்பு (Pelvic) நலம் குறைந்தது காரணமா? அல்லது சிசேரியன் பிரசவம், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் மருத்துவருக்கு கொஞ்சம் ரிஸ்க் குறைவு என்ற நிலை காரணமா? அல்லது 'சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில், இத்தனையாவது நாழிகையில் பாப்பாவை எடுத்து தர எவ்வளவு ஃபீஸ் ஆகும் டாக்டர்?’ எனக் கேட்கும் கூட்டம் பெருகியது காரணமா? 'அய்யோ! இப்பல்லாம் பயலாஜிக்கல் பேபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி வேறயா? மூணாம் நாள் ஆபீஸ் போற மாதிரி சிம்பிளா சிசேரியன் பண்ணிருங்கஎன்ற அவசரங்கள் காரணமா? பாப்பா கனவோடு நிற்கும் கணவனிடம், 'குழந்தை மெக்கோனியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம் குழந்தை சஃபகேட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபரேஷன் பண்ணிடலாமா? நீங்க சொல்லுங்கஎன மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் கேட்க, அந்தக் கணத்தில் கடவுளாக மட்டுமே அவரைப் பார்த்து, 'நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும் பத்திரமா வேணும்எனும் பயம் கலந்த பதில் காரணமா?’ - இவற்றை நான் கேட்கவில்லை; உலக சுகாதார நிறுவனம் கேட்கிறது!
கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுத்தங்கஞ்சி போதுமானது. கர்ப்பக்காலத் தொடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்பையின் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நலம் அளிக்கும். தாமரைப் பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். ஃபோலிக் அமிலம் நிறைந்த, வலி நிவாரணி தன்மையுடைய, வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலுடைய, ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடைய, இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்த இந்த மூலிகைகள், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், தாய்-சேய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான உணவுகள் பல கிடைக்கக்கூடும்.
வண்ணமுள்ள பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி கொண்ட உணவு, கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கேழ்வரகு அடையும் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரணம்.
அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும் பெருகிவரும் சர்க்கரை நோயைக் (Gestational diabetes) கண்டு பதறத் தேவை இல்லை. தேவைப்பட்டால் உரிய மருத்துவமும், வெள்ளைச் சர்க்கரை இல்லாத உணவும் இவர்களுக்குக் கொடுப்பது அவசியம். தினசரி உணவில் வெந்தயம், கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்வது, கூடுதல் கட்டுப்பாட்டைத் தரும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்என 23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'நவீனத் தாவரவியலின் தந்தைகார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.

இயற்கையைப் பார்த்து மற்ற மரபுகள் பயந்து கொண்டிருந்தபோதே, அதனை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஒரு நீண்ட அறிவியல் தேடல் நம்மிடையே இருந்தது. அந்த அறிவியலை அப்படியே ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?
சித்த மருத்துவ நிபுணர்.சிவராமன்

முடி வளர சித்தமருத்துவம்

முடி வளர சித்தமருத்துவம்
முடி உதிர்வதை தடுக்க:
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் :-

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் :-
ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.
எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.
அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.
திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.
கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்
ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா?

கருவேப்பில்லையின் மவுசு தெரியுமா?
-
கு.சிவராமன்

கொசுறாய்க் கிடைப்பதால் கறிவேப்பிலைக்குக் கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். வெறும் மணமூட்டியாக இருந்து, இலையோடு சேர்ந்து வெளியேறும் பொருளாக இதனை, இத்தனை காலம் பார்த்திருந்த பலருக்கும், கறிவேப்பிலை வேம்பை போன்ற மாபெரும் மருத்துவ மூலிகை அது என்பது தெரியாது. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் அணைத்துக் காக்கும் அற்புதமருந்து... கறிவேப்பிலை.

முடி உதிர்தலைத் தடுக்க

தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்க, கறிவேப்பிலைப் பொடியை தினமும் சோற்றில் கலந்து சாப்பிடவேண்டும்.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடித்தால், அதுதான் கறிவேப்பிலைப் பொடி. கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு எடுத்துச் சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.

கண்கள் என்றால் நமக்கு ஞாபகம் வருவது கேரட் மட்டும்தான். ஆனால், கறிவேப்பிலையும் பார்வையைத் துலங்க வைக்கும், பீட்டா கரோட்டின் நிறைந்தது. பப்பாளி, பொன்னாங்கண்ணி, தினை அரிசி போன்றவையும் கண்களைப் பாதுகாப்பவையே. 

ஆன்டிஆக்ஸிடன்ட்

தோல் சுருக்கம், உடல் சோர்வு, மூட்டு தேய்தல், நரை என வயோதிகம் வாசல் கதவைத் தட்டும் அத்தனைக்கும் இன்று ஆபத்பாந்தவனாய் இருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தாம். முன்பு, மருந்துச்சீட்டில் கொசுறாக வைட்டமின் மாத்திரை இருப்பது போல, இப்போது, எந்த வியாதி எனப் போனாலும், மருத்துவர் எழுதித்தரும் சீட்டில், கடைசியாய் குத்தவைத்திருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளே. அதுவும் கொசுறாக இல்லை, கூடுதல் விலையில். ஆனால், காய்கறிக்கடையில் இலவசமாகவே பல நேரங்களில் கொடுக்கப்படும் கறிவேப்பிலையில் அதிகபட்ச ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவையும்கூட. ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும் புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன்அளிப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. அதற்காக புற்றுநோய்க்குக் கறிவேப்பிலை சட்னி மருந்து என அர்த்தம் இல்லை. அவ்வப்போது கறிவேப்பிலையைத் துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்துவந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புரண்டு புற்றாய் மாற எத்தனிப்பதைத் தடுக்கும் என்பதுதான் பொருள்.

மேற்கத்திய விஞ்ஞானம் இதைச் சொல்வதற்கு முன்னர், நம் தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப் பல வருடங்களுக்கு முன்னதாகவே பாடியுள்ளனர். அஜீரணம், பசியின்மை, பித்த நோய்கள், பேதி எனப் பல நோய்களுக்குக் கறிவேப்பிலையைச் சாப்பிடச் சொன்னவர்கள் நம் மருத்துவர்கள். இந்த அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்று நோயின் ஆரம்பகாலக் குறிகுணங்கள்.

குழந்தையை சாப்பிடவைக்க

சரியாய் சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலை இலையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து, உடன் சிறிது கல்உப்பு, சீரகம், சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து, சுடுசோறில் சாப்பிடவைக்க, பசியின்மை போகும், என்றது சித்த மருத்துவம். அன்னப்பொடி, அய்ங்காய்ப்பொடி செய்து வைத்துக்கொள்வது போல, இந்தக் கறிவேப்பிலைப் பொடியை செய்துவைத்துக்கொண்டு, சோற்றின் முதல் உருண்டையில் இப்பொடியை போட்டுப் பிசைந்து, சாப்பிட வைப்பது சீரணத்தைத் தூண்டி, பசியூட்டும். 

அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும் ரத்த கொலஸ்ட்ராலை 30 சதவிகிதமும் குறைக்கிறது எனச் சொல்கிறார்கள்.

நல்ல கொழுப்பு அதிகரிக்க

பொதுவாய் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL (HIGH DENSITY LIPO PROTIEN) –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சிதான் இதற்கு நல்ல வழி. ஆனால், கறிவேப்பிலை நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும் என்பதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் உறுதிப்
படுத்தியுள்ளனர். சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே கறிவேப்பிலையை தினம் சாப்பிட்டுவந்தால் இவ்விரு நோய்களுக்கும் செயல்படு உணவாக (functional food) ஆக இந்த மூலிகை இருக்கும்

கறிவேப்பிலை மணமூட்டி மட்டுமல்ல, நலமூட்டியும்கூட...

உடல் நலத்தை பாதுகாக்கும் பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் :-


உடல் நலத்தை பாதுகாக்கும் பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் :-
இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.